SPBயின் பாடலை பியானோவில் வாசித்த நடிகர் விவேக்!

தமிழ் சினிமாவின் சிறந்த பாடல்களை கொடுத்த இனிமையான குரலுக்கு சொந்தக்காரரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார்.

இவரது இழப்பு தமிழ் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பலரும் தங்கள் இரங்கலை கூட தெரிவிக்க முடியாத நிலையில் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். இவரது ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் இணையதளம் முழுவதும் இவருக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் எஸ்பிபியின் பாடலை பியானோவில் வாசித்து அதை அவருக்கு டெடிகேட் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Share.