இசைஞானியின் புதிய ஸ்டுடியோவிற்கு சென்ற நடிகர் விவேக்… தீயாய் பரவும் வீடியோ!

தமிழ் சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘இசைஞானி’ இளையராஜா. கடந்த பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி சென்னையில் இளையராஜா தனது புதிய ஸ்டுடியோவை துவங்கினார். ஸ்டுடியோ துவங்கிய முதல் நாளில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்துக்கான பாடல்கள் கம்போஸிங் பணியை தொடங்கினார் இளையராஜா.

இந்த படத்தில் காமெடி நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கிறார். இதில் மிக முக்கிய ரோல்களில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், பவானிஸ்ரீயும் நடிக்கின்றனர். சமீபத்தில், ஆரம்பிக்கப்பட்ட இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி இசையமைப்பாளர் ‘இசைஞானி’ இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவிற்கு டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நேரில் சென்றார். தற்போது, பிரபல காமெடி நடிகர்களான விவேக் மற்றும் செல் முருகன் இசைஞானியின் ஸ்டுடியோவிற்கு நேரில் சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.