முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்த மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி!

‘காமெடி’ என்று சொன்னாலே விவேக்கின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் விவேக் பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

கடந்த ஆண்டு (2021) ஏப்ரல் 15-ஆம் தேதி நடிகர் விவேக் ‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக் கொண்டார். பின், ஏப்ரல் 16-ஆம் தேதி நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ICU-வில் அனுமதிக்கப்பட்ட விவேக்கிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள்.

ஆனால், ஏப்ரல் 17-ஆம் தேதி (2021-ஆம் ஆண்டு) காலை சிகிச்சை பலனின்றி விவேக் இயற்கை எய்தினார். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 25-ஆம் தேதி) மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது கணவர் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரின் பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தகவல் கிடைத்துள்ளது.

Share.