வீட்டை விட்டு வெளியே வர பயப்படும் ஹீரோ… அந்த பரபரப்பு செய்தி தான் காரணமாமே!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் அந்த கடவுள் நடிகர். இப்போது, இவர் நடிப்பில் நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ஒரு படம் அடுத்த வாரம் OTT-யில் ரிலீஸாக உள்ளது. ஸோம்பி பட இயக்குநர் இயக்கியியுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக கடவுள் நடிகரின் மனைவியே நடித்திருக்கிறார்.

தற்போது, இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு கூட கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்லி வருகிறாராம் அந்த கடவுள் நடிகர். இதற்கு காரணம் என்னவென்று விசாரித்தோம். எல்லாம் கடந்த வாரம் இவரை பற்றி வெளியான ஒரு பரபரப்பு செய்தி தான் காரணம் என்று சொல்கிறார்கள். ஜெர்மனில் வாழ்ந்து வரும் ஒரு தமிழ் பெண், லாக் டவுன் டைமில் கடவுள் நடிகர் தான் பட வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், தன்னை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் என்னிடம் ஆசை வார்த்தை கூறியதுடன் ரூ.70 லட்சத்து 40 ஆயிரம் பணத்தையும் வாங்கினார்.

இப்போது அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்வதோடு, என்னிடம் வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார் என்று கூறி பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலம் கடவுள் நடிகர் மீது புகார் கொடுத்திருக்கிறார் அந்த ஜெர்மனி பெண். இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது உள்துறை அமைச்சகம். இப்புகாரால் தான் கடவுள் நடிகர் வெளியே செல்லவே பயப்படுகிறாராம்.

Share.