ட்விட்டரில் அந்த ஹேஸ்டேக்கை உருவாக்கி சண்டை போட்டுக்கொள்ளும் விஜய் – அஜித் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஆண்டு (2021) பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

விஜய்யின் அடுத்த படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். ‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்க உள்ளார். இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் இன்னொரு முன்னணி நடிகர் ‘தல’ அஜித். இவரின் கடைசி படமான ‘வலிமை’ கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை இயக்குநர் ஹெச் வினோத்தும், 62-வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவனும் இயக்க உள்ளனர்.

என்னதான் ரியல் லைஃபில் விஜய் – அஜித் நண்பர்களாக பழகி வந்தாலும், இவர்களது ரசிகர்கள் மோதிக்கொள்வது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், அஜித்தின் ரசிகர்கள் ட்விட்டரில் #RIPJosephVijay என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தார்கள். இதனை பார்த்த விஜய்யின் ரசிகர்கள் ட்விட்டரில் #Aids_Patient_Ajith என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்ய துவங்கி விட்டார்கள்.

Share.