அடேங்கப்பா… நடிகை அக்ஷரா ஹாசனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

முன்னணி நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் மகளாகவும், பிரபல நடிகை ஸ்ருதி ஹாசனின் தங்கையாகவும் இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் அக்ஷரா ஹாசன். இவர் அறிமுகமான முதல் படத்திலையே இரண்டு சூப்பர் நடிகர்களான அமிதாப் பச்சனும் – தனுஷும் இணைந்து நடித்திருந்தார்கள். அது தான் ஹிந்தி படமான ‘ஷமிதாப்’.

‘ஷமிதாப்’ படத்துக்கு பிறகு அக்ஷரா ஹாசனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘லாலி கி ஷாதி மெயின் லாட்டூ தீவானா (ஹிந்தி), விவேகம் (தமிழ்), கடாரம் கொண்டான் (தமிழ்)’ என படங்கள் குவிந்தது. இதன் பிறகு ‘ஃபிங்கர்டிப்’ என்ற வெப் சீரிஸில் நடித்தார் அக்ஷரா ஹாசன். இப்போது இவர் ‘அக்னிச் சிறகுகள்’ என்ற தமிழ் படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்து கொண்டிருக்கிறாராம்.

சமீபத்தில், அக்ஷரா ஹாசன் நடித்துள்ள ஒரு புதிய தமிழ் படம் குறித்த அறிவிப்பு வந்தது. ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குநர் ராஜா ராமமூர்த்தி இயக்கியுள்ளார். ‘ட்ரெண்ட் லவுட்’ நிறுவனம் தயாரித்துள்ள இதில் நடிகை அக்ஷரா ஹாசனுக்கு பாட்டியாக பிரபல பாடகி உஷா உதுப் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை அக்ஷரா ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.45 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.