அமலா பாலை திருமணம் செய்ய என்ன தகுதிகள் வேண்டும் ?

2010-ஆம் ஆண்டு வெளியான வீரசேகரன் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகை அமலா பால் . வீரசேகரன் படத்தில் இவர் நடித்து இருந்தாலும் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்த படம் மைனா . அதன் பிறகு தெய்வத்திருமகள் , வேட்டை , தலைவா , வேலையில்லா பட்டதாரி, பசங்க 2 என்று விக்ரம் , ஆர்யா , விஜய் , தனுஷ் , சூர்யா என முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தார் .

இவர் நடிப்பில் கடைசியாக வந்த படம் ஆடை . இந்த படத்தை இயக்கியவர் மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னா குமார் .2009-ஆம் ஆண்டு இந்த படம் வெளியாகி இருந்தது . இந்த படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்தது சர்ச்சை ஆனது . இந்த படத்திற்கு பிறகு அமலா பால் குட்டி ஸ்டோரி என்கிற அந்தாலஜி படத்தில் நடித்து இருந்தார் .

இந்நிலையில் இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாக உள்ள மின்மினி படத்தில் நடிகை அமலாபால் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகி இருந்தது . நடிகை அமலா பால் இன்ஸ்டகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் . இந்நிலையில் அமலாபாலிடம் ரசிகர் ஒருவர் அமலாபாலிடம் உங்களை திருமணம் செய்து கொள்ள என்னென்ன தகுதிகள் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அமலாபால், ‘அந்த தகுதி என்னவென்று எனக்கு இன்னும் தெரியவில்லை. என்னை நானே புரிந்து கொள்ளும் பயணத்தில் தான் இருக்கிறேன் என்றும் அதனால் தன்னை திருமணம் செய்து கொள்ள என்னென்ன தகுதி வேண்டும் என்பதை தெரிந்தவுடன் உங்களுக்கு சொல்கிறேன்’ என கூறியுள்ளார்,

Share.