கோட் சூட்டில் மாஸ் காட்டும் அம்மு அபிராமி… புதிய போட்டோஷூட்டிற்கு குவியும் லைக்ஸ்!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அம்மு அபிராமி. இவருக்கு அமைந்த முதல் வாய்ப்பே ‘தளபதி’ விஜய் படத்தில் தான். அது தான் ‘பைரவா’. அதன் பிறகு ‘என் ஆளோட செருப்பக் காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம், ராட்சசன்’ ஆகிய படங்களில் வலம் வந்தார் அம்மு அபிராமி.

இதில் குறிப்பாக ‘தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன்’ ஆகிய இரண்டு படங்களிலும் அதிக கவனம் ஈர்த்தார் அம்மு அபிராமி. இவ்விரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு இவருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழில் ‘துப்பாக்கி முனை, அசுரன், தம்பி, அடவி’ என படங்கள் குவிந்தது. அம்மு அபிராமி தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் மூன்று படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது, நடிகை அம்மு அபிராமி நடிப்பில் அருண் விஜய்யின் ‘யானை’ மற்றும் கீர்த்தி பாண்டியனின் ‘கண்ணகி’ என இரண்டு தமிழ் மொழி படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். அம்மு அபிராமி கோட் சூட் அணிந்து மாஸாக போஸ் கொடுத்துள்ள இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

 

Share.