நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில் & வீடியோஸ்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே சரத்குமாருடன் தான். அது தான் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இயக்கியிருந்தார்.

இந்த படத்துக்கு பிறகு நடிகை ஆண்ட்ரியாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, அரண்மனை, வலியவன், உத்தம வில்லன், தரமணி, அவள், வடசென்னை, மாஸ்டர், அரண்மனை 3’ என தமிழ் படங்கள் குவிந்தது.

இப்போது, ஆண்ட்ரியா நடிப்பில் ‘வட்டம், மாளிகை, கா, நோ என்ட்ரி, பிசாசு 2’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இன்று (டிசம்பர் 21-ஆம் தேதி) நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோக்களை ஆண்ட்ரியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Share.