ஆண்ட்ரியாவை கட்டாயப்படுத்திய இயக்குனர் !

கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான படம் பிசாசு . இந்த படத்தை இயக்கி இருந்தவர் இயக்குனர் மிஷ்கின் . இயக்குனர் பாலா இந்த படத்தை தயாரித்து இருந்தார் . ராதா ரவி இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் . இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் மிஷ்கின் பிசாசு படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க போவதாக அறிவித்தார் .நடிகை ஆண்ட்ரியா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார் . பிசாசு 2 படத்தின் முன்னோட்டம் வருகின்ற ஏப்ரல் மாதம் 29-ஆம் வெளியாக இருக்கிறது .இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக இந்த படத்தில் நடித்துள்ளார் என்ற செய்தி வெளியாகி இருந்தது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

‘பிசாசு 2 கதையில், 15 நிமிட காட்சியில் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்றனர். இதனால் நடிக்க மறுத்தேன். நான் மறுத்த போதும், என்னை கட்டாயப்படுத்தினர். பின்னர் கதை தரமானதாக இருந்ததால் அந்த காட்சியில் நடிக்க சம்மதித்தேன்’ என ஆண்ட்ரியா கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share.