அடேங்கப்பா… நடிகை பிந்து மாதவியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் பிந்து மாதவி. இரண்டு தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், மூன்றாவது தமிழ் படம் தான் இவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அது தான் ‘கழுகு’. அப்படத்தில் ‘கவிதா’ என்ற ரோலில் வலம் வந்து கவனம் ஈர்த்தார் பிந்து மாதவி.

‘கழுகு’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை பிந்து மாதவிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும், சவாலே சமாளி, பசங்க 2, ஜாக்சன் துரை, பக்கா, கழுகு 2’ என படங்கள் குவிந்தது.

பிந்து மாதவி தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். மேலும், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். இப்போது, பிந்து மாதவி நடிப்பில் ‘மாயன், பகைவனுக்கு அருள்வாய், யாருக்கும் அஞ்சேல்’ என மூன்று தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகை பிந்து மாதவியின் சொத்து மதிப்பு ரூ.5 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.