“பட வாய்ப்பு வரல, கல்யாணமாச்சும் சீக்கிரம் பண்ணி வைங்க”… கதறி அழுத 40 வயது நடிகை!

திரையுலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் அந்த நடிகை. தமிழில் இவர் அறிமுகமானதே நம்பர் படத்தில் தான். அதன் பிறகு பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். அதுவும் அந்த தெலுங்கு பிரம்மாண்ட இயக்குநர் இயக்கிய மெகா பட்ஜெட் படம், அந்த நடிகையின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் அமைந்தது.

கடைசியாக அந்த நடிகை நடித்த ஒரு த்ரில்லர் படம், பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸானது. ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஸ்டேட்டஸ் தட்டினார்கள். சமீப காலமாக எந்த மொழி படங்களிலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்த அந்த நடிகை, அடுத்தடுத்து நல்ல கதைகளை செலெக்ட் செய்து நடித்து மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டாப் ஹீரோயின்களின் லிஸ்டில் இடம்பிடிக்க வேண்டும் என்று சமீபத்தில் முடிவெடுத்தார்.

ஆனால், இவருக்கு வயதாகி விட்டது என்றும், உடல் எடை அதிகமாகி விட்டது என்றும் கூறி சில இயக்குநர்கள் கதை சொல்லவே தயங்குகிறார்கள். இப்போது 40 வயதான அந்த நடிகை “பட வாய்ப்பு தான் வரல, கல்யாணமாச்சும் சீக்கிரம் பண்ணி வைங்க” என்று குடும்பத்தினரிடம் அழுதபடி பேசியதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Share.