இந்துஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் கியூட் ஸ்டில்ஸ்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் இந்துஜா ரவிச்சந்திரன். அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் பாராட்டையும் பெறுவது என்பது அவ்வளவு ஈஸி இல்லை. ஆனால், அதை செய்து காட்டியவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்.

2017-ஆம் ஆண்டு ரிலீஸான ‘மேயாத மான்’ என்ற படம் தான் இந்துஜாவிற்கு வாய்ப்பு கிடைத்த முதல் படம். இதில் ஹீரோ வைபவ்வின் தங்கை கதாபாத்திரத்தில் ‘சுடர்விழி’-யாக வலம் வந்திருந்தார் இந்துஜா. இப்படம் சூப்பர் ஹிட்டானதும், நடிகை இந்துஜாவிற்கு அடித்தது ஜாக்பாட். அவரின் கால்ஷீட் டைரியில் ‘மெர்க்குரி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர், பிகில்’ என படங்கள் குவிந்தது.

இதில் ‘பிகில்’, இந்துஜாவிற்கு ரொம்பவும் ஸ்பெஷலான ஒரு படமாக அமைந்தது. காரணம் இந்த படத்தில் கதையின் நாயகனாக முன்னணி ஹீரோ ‘தளபதி’ விஜய் நடித்திருந்தார். படத்தில் இந்துஜா கால்பந்து விளையாட்டு வீராங்கனையாக நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) நடிகை இந்துஜாவின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த கியூட்டான ஸ்டில்ஸை இந்துஜா வெளியிட்டுள்ளார்.

1

2

3

 

View this post on Instagram

 

A post shared by I N D H U J A (@indhuja_ravichandran)

Share.