அடேங்கப்பா… ‘பிக் பாஸ்’ நடிகை ‘ஜாங்கிரி’ மதுமிதாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ‘ஜாங்கிரி’ மதுமிதா. 2012-ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மதுமிதா. இதில் ‘ஜாங்கிரி’ என்ற கதாபாத்திரமாக வலம் வந்த மதுமிதா, அதிக கவனம் ஈர்த்தார்.

அதன் பிறகு ‘அட்டகத்தி, ராஜா ராணி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜில்லா, காக்கி சட்டை, காஞ்சனா 2, டிமான்ட்டி காலனி, காஷ்மோரா, கவலை வேண்டாம், இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த், விஸ்வாசம், டிக்கிலோனா’ போன்ற பல படங்களில் நடித்தார்.

தற்போது, ‘ஜாங்கிரி’ மதுமிதா நடிப்பில் ‘ஆயிரம் ஜென்மங்கள், தமிழரசன், டைட்டானிக் காதலும் கவுந்து போகும்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இவர் ‘பிக் பாஸ்’ சீசன் 3-யின் போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ‘ஜாங்கிரி’ மதுமிதாவின் சொத்து மதிப்பு ரூ.5 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.