படு கவர்ச்சியான காஸ்டியூமில் காஜல் அகர்வால்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

திரையுலகில் பிரபல நடிகைககளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். ஆரம்பத்தில் இவர் நடித்த ‘பழனி, பொம்மலாட்டம், மோதி விளையாடு’ ஆகிய தமிழ் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு 2010-ஆம் ஆண்டு ‘நான் மகான் அல்ல’ என்ற படத்தில் கார்த்திக்கு ஜோடியாக வலம் வந்தார் காஜல் அகர்வால். சுசீந்திரன் இயக்கிய இந்த படம் சூப்பர் ஹிட்டானது.

‘நான் மகான் அல்ல’ ஹிட்டிற்கு பிறகு நடிகை காஜல் அகர்வாலுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மாற்றான், துப்பாக்கி, அழகு ராஜா, ஜில்லா, மாரி, பாயும் புலி, கவலை வேண்டாம், விவேகம், மெர்சல், கோமாளி’ என படங்கள் குவிந்தது. தமிழ் மொழி படங்கள் தவிர ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார் காஜல் அகர்வால்.

கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கெளதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால். இப்போது காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் ‘இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், ஹேய் சினாமிகா’, தெலுங்கில் ‘மோசகல்லு, ஆச்சார்யா’ மற்றும் ஹிந்தியில் ‘மும்பை சகா’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

Share.