வாரிசு படத்தில் இணைந்த நடிகை !

நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 66 படத்தின் பூஜை சென்னையில் சில வாரங்களுக்கு முன்னர் நடந்தது . அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது . அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா , நடிகை சங்கீதா மற்றும் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது . முழுக்க முழுக்க குடும்ப படமாக இந்த படம் உருவாக இருக்கிறது .

இசையமைப்பாளர் தமன் முதன் முதலாக விஜய் படத்திற்கு இசையமைக்கிறார் . பொதுவாக நடிகர் விஜய் நடிக்கும் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும் எனவே தமன் இசை மீது அனைவரும் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர் .

இந்நிலையில் தளபதி 66 படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 66 படத்தின் தலைப்பை நேற்று அறிவித்தது படக்குழு . வாரிசு என்ற தலைப்பு படத்திற்கு வைக்கப்படுள்ளது . இந்நிலையில் நடிகை குழ்பு இந்த படத்தில் நடிக்கிறார் என்ற தகவலை அவரே உறுதி செய்துள்ளார் . இந்த படத்தில் நடிகை குஷ்பூ விஜய்க்கு அக்காவாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது நடிகர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியீட்டு நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் . இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .

Share.