நம்ம லக்ஷ்மி மேனனா இது?… அசத்தலான புதிய போட்டோஷூட்!

‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ். இந்த லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருக்கிறது.

ஆகையால், இந்த நேரத்தை அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றி வருகிறார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டு வருகிறார்கள். ‘சுந்தர பாண்டியன்’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை லக்ஷ்மி மேனன்.

அதன் பிறகு ‘கும்கி, குட்டிப் புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார். இப்போது, லக்ஷ்மி மேனன் நடிப்பில் மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அசத்தலான புதிய ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

Hi friends

Posted by Lakshmi Menon on Thursday, August 20, 2020

Share.