உடல் எடையை குறைத்த லாஸ்லியா!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்த லாஸ்லியா மரியநேசன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கவினை காதலித்தார். பின்பு இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது இரண்டு பேறும் அவரவர் பாதையில் பயணித்து வருகின்றனர்.

இலங்கையைச் சார்ந்த ஈழத்து தமிழச்சியான இவர் இலங்கை சின்னத்திரை சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு படங்களில் நடிக்க தொடங்கிய லாஸ்லியா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.கே.எஸ்.ரவிக்குமாருடன் கூகுள் குட்டப்பன் என்கிற படத்தில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் உடல் எடை கூடியது போல இருந்த லாஸ்லியா தற்போது தன்னுடைய எடையை குறைத்து எலும்பு தோலுமாக மாறியுள்ளார். புடவையில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட அந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Share.