கங்கனாவின் ‘தலைவி’ படத்துக்காக அந்த விஷயத்தை செய்யும் மதுபாலா!

தமிழ் சினிமாவில் எந்த அளவிற்கு ஹீரோக்கள் மாஸ் காட்டுவதை ரசிகர்கள் விரும்புகிறார்களோ, அதே அளவுக்கு ஹீரோயின்கள் கெத்து காட்டுவதையும் லைக் பண்ணுகிறார்கள். ஹீரோயின்களை மையமாக வைத்து வெளி வரும் படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இப்போது, தமிழில் கதாநாயகிகளை மையமாக வைத்து பல படங்கள் தயாராகி கொண்டிருக்கிறது.

இதில் மிக முக்கியமான படம் தான் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோ பிக்கான இந்த படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி கொண்டிருக்கிறார். இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து கொண்டிருக்கிறார். சமீபத்தில், இதன் ஃபைனல் ஷெடியூல் ஷூட்டிங் முடிவடைந்தது. தற்போது, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

கடந்த மார்ச் மாதம் 23-ஆம் தேதி கங்கனா ரனாவத்தின் பர்த்டே ஸ்பெஷலாக படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இந்நிலையில், இந்த படத்தில் எம்.ஜி.ஆரின் (நடிகர் அரவிந்த் சாமி) மனைவி ஜானகி ரோலில் நடித்திருக்கும் நடிகை மதுபாலா தனது காட்சிகளுக்கு டப்பிங் பேச ஆரம்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Madhoo Shah (@madhoo_rockstar)

Share.