மது ஷாலினிக்கு திருமணம் நடந்தது !

தமிழ் சினிமாவில் பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் மது ஷாலினி. விஷால், ஜனனி ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் இந்த படத்தில் நடித்து இருந்தார்.இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்த இவர் சமீபத்தில் வெளியான விசித்திரன் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படம் மலையாள படத்தின் ரீமேக் ஆகும். ஆர். கே. சுரேஷ் இந்த படத்தில் நாயகனாக நடித்து இருந்தார்.

இந்த நிலையில் இவருக்கும் கோகுல் என்பவருக்கும் ஹைதராபாத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் நடிகை மது ஷாலினி அவரது திருமண பகைப்படங்கை பகிர்ந்து உள்ளார். தனது கணவருடன் ஜோடியாக இருக்கும் படங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

Share.