அடேங்கப்பா… நடிகை மனிஷா கொய்ராலாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மனிஷா கொய்ராலா. இவருக்கு தமிழில் முதல் படமே டாப் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தான் அமைந்தது. அது தான் ‘பம்பாய்’. இதில் ஹீரோவாக அரவிந்த் சாமி நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் மனிஷா கொய்ராலாவின் நடிப்பு ரசிகர்களை அதிக லைக்ஸ் போட வைத்தது.

‘பம்பாய்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை மனிஷா கொய்ராலாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘இந்தியன், ஆளவந்தான், மும்பை Xபிரஸ்’, ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் ‘முதல்வன், ஒரு மெல்லிய கோடு’, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘பாபா’, தனுஷின் ‘மாப்பிள்ளை’ என தமிழ் படங்கள் குவிந்தது.

நடிகை மனிஷா கொய்ராலா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி, மலையாளம், கன்னடம், நேபாளி, பெங்காலி, தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். தற்போது, நடிகை மனிஷா கொய்ராலாவின் சொத்து மதிப்பு ரூ.80 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.