45 வயதான ஹீரோவுடன் டூயட் பாட ஆசை… படக்குழுவிற்கு வலை விரித்த ஹீரோயின்!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அந்த நடிகை. இவருக்கு முதல் பட வாய்ப்பு அமைந்ததே தமிழ் சினிமாவில் தான். சூப்பர் ஹீரோ படமான இது ஹிட் ஆகாமல் போனதால் அந்த நடிகையின் கால்ஷீட் டைரியில் புதிய தமிழ் படங்கள் எதுவும் இணையவில்லை.

பின், அந்த நடிகைக்கு படங்களை அடுத்தடுத்து கொடுத்து அவரை டாப் ஹீரோயின்களின் லிஸ்டில் இடம்பிடிக்க வழிவகுத்து அழகு பார்த்தது ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமா. இப்போது இவர் நடிப்பில் ஹிந்தியில் ஒரு படமும், தெலுங்கில் மூன்று படங்களும் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், மீண்டும் ஒரு புதிய தமிழ் படத்தில் நடிக்க கமிட்டானார் அந்த நடிகை. இந்த படத்தில் முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க ரூ.3.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இந்நிலையில், இன்னொரு டாப் ஹீரோவும் – ‘V’ சென்டிமென்ட் இயக்குநரும் கைகோர்க்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஆசைப்பட்டு அப்படக்குழுவிருக்கு அந்த நடிகை நட்பு வலை விரித்துள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது

Share.