“டாப் ஹீரோக்களுடன் டூயட் பாட வேண்டும்”… பட வாய்ப்புக்காக நடிகை எடுத்த புது ரூட்!

டிவியில் செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை என வலம் வந்தவரை ஹீரோயினாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தமிழ் சினிமா. முதல் படம் ஹிட்டடித்ததும் அடுத்ததாக குடும்ப படம், எலி படம், ஆக்ஷன் படம் என அந்த நடிகையின் கால்ஷீட் டையிரில் படங்கள் குவிந்தது.

தற்போது அந்த நடிகை கைவசம் வைத்திருக்கும் படங்களின் எண்ணிக்கையை கேட்டே பல இளம் நடிகைகள் ஷாக் ஆகுகிறார்கள். ஏனென்றால், ஒன்றல்ல இரண்டல்ல மூன்றல்ல பத்து படங்கள் இவரது நடிப்பில் லைன் அப்பில் இருக்கிறது. அனைத்துமே தமிழ் மொழி படங்கள் தான்.

இருப்பினும் அந்த நடிகைக்கு எப்படியாவது டாப் ஹீரோயின்களின் லிஸ்டில் இடம்பிடித்து விட வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. ஆகையால், விழாக்களுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் பல டாப் ஹீரோக்களுக்கு வலை வீசி வருகிறாராம் அந்த நடிகை. அவரின் வலையில் பல ஹீரோக்கள் விழுந்து விட்டார்களாம்.

Share.