திருமணமான இயக்குநர்… பட வாய்ப்புக்காக இளம் ஹீரோயின் போட்ட மாஸ்டர் ப்ளான்!

பிரபல ஒளிப்பதிவாளரின் மகள் தான் அந்த இளம் நடிகை. இதுவரை இவர் நடித்து தமிழில் இரண்டு படங்கள் தான் ரிலீஸாகி இருக்கிறது. ஆனால், அதற்குள் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இதற்கு காரணம் இவர் நடித்திருக்கும் இரண்டு படங்களுமே முன்னணி ஹீரோக்களின் படங்கள்.

இதில் ஒரு படம் இந்த ஆண்டு தான் வெளியானது. அந்த படத்தின் இயக்குநருக்கு தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மொழியிலும் பல ஆஃபர்கள் வந்த வண்ணமுள்ளது. இதை தெரிந்து கொண்ட அந்த இளம் நடிகை, அந்த இயக்குநரை தன் வசம் வைத்துக் கொள்ள வேண்டுமென ப்ளான் போட்டு வருகிறாராம்.

 

தினமும் பல முறை அந்த இயக்குநருக்கு போன் செய்த வண்ணமிருந்திருக்கிறார் அந்த நடிகை. இப்போது இயக்குநரே அந்த நடிகைக்கு போன் போட்டு பேசுகிறாராம். இதில் ஹைலைட் என்னவென்றால் அந்த இயக்குநருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் இருக்கிறதாம். பட வாய்ப்புகளை பெற வேண்டும் என நடிகை விரித்த வலையில் இந்த இயக்குநர் இப்படி விழுந்து விட்டாரே என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Share.