‘இன்று நேற்று நாளை’ பட நடிகை மியா ஜார்ஜ் வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் மியா ஜார்ஜ். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே நடிகர் ஆர்யா தயாரித்த படம் தான். இதில் ஆர்யாவின் தம்பி சத்யா தான் கதையின் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை ஜீவா ஷங்கர் இயக்கியிருந்தார்.

‘அமர காவியம்’ படத்துக்கு பிறகு நடிகை மியா ஜார்ஜுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் விஷ்ணு விஷாலின் ‘இன்று நேற்று நாளை’, தினேஷின் ‘ஒரு நாள் கூத்து’, சசிக்குமாரின் ‘வெற்றிவேல்’, விஜய் ஆண்டனியின் ‘எமன்’ என தமிழ் படங்கள் குவிந்தது. மியா ஜார்ஜ் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி தொழிலதிபர் அஷ்வின் பிலிப்ஸ் என்பவரை மியா ஜார்ஜ் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், மியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இப்போது மியா ஜார்ஜ் நடிப்பில் தமிழில் ‘கோப்ரா, இன்று நேற்று நாளை 2’, மலையாளத்தில் ‘CID ஷீலா’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகை மியா ஜார்ஜின் தந்தை இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது.

 

Share.