நயன்தாரா அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன்!

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல்’, அறிமுக இயக்குநர் விக்னேஷ் படம், இயக்குநர் யுவராஜ் படம், மலையாளத்தில் ‘கோல்டு’, தெலுங்கில் ‘காட்ஃபாதர்’, ஹிந்தியில் நடிகர் ஷாருக்கான் படம் என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம், நயன்தாராவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இந்த படத்தை அவரின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், சமந்தாவும் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், கொச்சியில் நயன்தாரா அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். விக்னேஷ் சிவன் அவருக்கு இன்ஸ்டாகிராமில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததுடன், கேக் வெட்டும்போது எடுத்த ஸ்டில்ஸையும் வெளியிட்டுள்ளார்.

 

Share.