தனது மகளின் கியூட்டான ஸ்டில்லை இன்ஸ்டாகிராமில் ஷேரிட்ட நடிகை பிரணிதா!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் பிரணிதா சுபாஷ். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே அருள்நிதியுடன் தான். அது தான் ‘உதயன்’. இந்த படத்தை இயக்குநர் சாப்ளின் இயக்கியிருந்தார். ‘உதயன்’ படத்துக்கு பிறகு நடிகை பிரணிதா சுபாஷுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ என தமிழ் படங்கள் குவிந்தது. பிரணிதா சுபாஷ் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

கடந்த ஆண்டு (2021) மே மாதம் 30-ஆம் தேதி பெங்களூரில் தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை பிரணிதா சுபாஷ் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், நிதின் ராஜு – பிரணிதா சுபாஷ் தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

தற்போது, இக்குழந்தைக்கு ‘ஆர்னா’ (ARNA) என பெயர் சூட்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை பிரணிதாவே தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்ததுடன், மகளின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Share.