அடேங்கப்பா… நடிகை ரீமா சென்னின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் ரீமா சென். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘மின்னலே’. இதில் மாதவன் ஹீரோவாக நடிக்க, இதனை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இயக்கியிருந்தார்.

‘மின்னலே’ படத்துக்கு பிறகு நடிகை ரீமா சென்னுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தளபதி’ விஜய்யின் ‘பகவதி’, ‘சீயான்’ விக்ரமின் ‘தூள்’, ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் ‘கிரி’, விஷாலின் ‘செல்லமே’, சிலம்பரசன் TR-யின் ‘வல்லவன்’, கார்த்தியின் ‘ஆயிரத்தில் ஒருவன்’, தமன் குமாரின் ‘சட்டம் ஒரு இருட்டறை’ என படங்கள் குவிந்தது.

ரீமா சென் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். ரீமா சென் தன்னை விட 8 வயது பெரியவரான ஷிவ் கரண் சிங் என்பவரை 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். தற்போது, நடிகை ரீமா சென்னின் சொத்து மதிப்பு ரூ.30 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.