அதிக சம்பளம்… ஆனாலும் அந்த ஹீரோவின் படத்தில் நடிக்க மறுத்த நம்பர் நடிகை!

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அந்த நம்பர் நடிகை. இப்போது ரௌடி பட இயக்குநரை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நடிகையின் முன்னாள் காதலர் விரல் வித்தை நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் முறிவுக்கு பிறகு கூட இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் டூயட் பாடி ஆடினார்கள். தற்போது, அந்த விரல் வித்தை நடிகர் ஒரு புதிய ரொமான்டிக் படத்தில் நடிக்க உள்ளாராம். அதை ஸ்டைலிஷ் இயக்குநர் தான் இயக்குகிறாராம்.

இந்த படத்தில் மீண்டும் அந்த நம்பர் நடிகையும் – விரல் வித்தை நடிகரும் ஜோடியாக நடித்தால், இப்படத்துக்கான எக்ஸ்பெக்டேஷன் லெவல் எகிறி விடும் என்று இயக்குநரும், அப்படத்தின் தயாரிப்பாளரும் நினைத்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அந்த நடிகையிடம் அதிக சம்பளம் தருகிறோம் என்று சொல்லி பேச்சு வார்த்தை நடத்தியபோது, அதிக சம்பளம் கொடுத்தால் கூட நான் இந்த படத்தில் அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக சொல்லி விட்டாராம்.

Share.