பாலிவுட் ஹீரோவின் படத்துக்கு நோ சொன்ன நம்பர் நடிகை… முன்னாள் காதலர் தான் காரணமாமே!

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அந்த நம்பர் நடிகை. இப்போது ரௌடி பட இயக்குநரை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக சொல்லப்படுகிறது. இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

ஆனால், ஹிந்தி மொழி படத்தில் இந்த நம்பர் நடிகை நடித்ததில்லை. தமிழில் முன்னணி ஹீரோயின்கள் லிஸ்டில் இடம்பிடித்தவர்கள் அடுத்ததாக பாலிவுட்டிற்குள் என்ட்ரியாவார்கள். அதேபோல், இந்த நம்பர் நடிகைக்கும் ஹிந்தியில் நடிக்க பல படங்களின் ஆஃபர்கள் வந்த வண்ணமிருந்தது.

அதிலும் குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட் பாட்ஷாவின் படத்தில் நடிக்க இந்த நம்பர் நடிகையிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், நடிகையோ தான் இந்த படத்தில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாராம். இதற்கு என்ன காரணம்? என்று விசாரித்தோம். இப்படத்தில் இடம்பெறும் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாட அழைத்தது ஒரு காரணமாம். இன்னொரு காரணம், நடிகையின் முன்னாள் காதலரான நடன இயக்குநரின் சகோதரர் தான் அந்த ஐட்டம் பாடலுக்கு நடன இயக்குநராம். அதனால் தான் நம்பர் நடிகை இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டார் என்று சொல்லப்படுகிறது.

Share.