பட வாய்ப்புக்காக செய்த விஷயம்… இப்போது அதை நினைத்து வருத்தப்படும் நடிகை

ஆரம்பத்தில் சில ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த இந்த நடிகை, தமிழில் டாப் ஸ்டாரின் ரீமேக் படத்தில் அவரது மருமகனுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு லவ் படம், சூப்பர் ஹீரோ படம், காமெடி படம், சூப்பர் ஹிட்டான போலீஸ் படத்தின் இரண்டாம் பாகம் என நடிகையின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. பின், விரல் வித்தை நடிகரை காதலித்து வந்தார்.

ஆனால், நடிகையுடைய அம்மாவின் கண்டிப்பால் அந்த காதல் கைவிடப்பட்டது. இப்போது அந்த நடிகையின் கேரியரில் 50-வது படம் பரபரப்பாக உருவாகி வருகிறது. இதில் அவரது முன்னாள் காதலரும் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், வருத்தத்திற்குரிய செய்தி என்னவென்றால் 50-வது படத்தை தவிர வேறு எந்த ஒரு படத்திலும் நடிக்க நடிகையை யாருமே கமிட் செய்யவில்லை.

இதற்கு நடிகையின் உடல் எடை அதிகமாக இருப்பது தான் காரணம் என அவரது நெருங்கிய வட்டாரம் கூறியிருக்கிறார்கள். உடனே, நடிகையும் உடல் எடையை குறைத்து தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் ஸ்டில்ஸை ஷேரிட்ட வண்ணமுள்ளார். ஆனால், அப்போதும் அவருக்கு எந்த ஒரு வாய்ப்பும் வரவில்லையாம். இதனால், அந்த நடிகை தான் உடல் எடையை குறைக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் இல்லாமல் போனதே என்று வருத்தத்தில் இருக்கிறாராம்.

Share.