அடேங்கப்பா… நடிகை ரோஜாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் ரோஜா. இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘செம்பருத்தி’. இதில் பிரஷாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஆர்.கே.செல்வமணி இயக்கியிருந்தார்.

‘செம்பருத்தி’ படத்துக்கு பிறகு நடிகை ரோஜாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சூரியன், உழைப்பாளி, அதிரடிப்படை, இந்து, வீரா, ஸரிகமபதநி, ராசய்யா, மக்கள் ஆட்சி, வள்ளல், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், புதுமை பித்தன், ஹவுஸ்ஃபுல், சுயம்வரம், திருநெல்வேலி, லூட்டி, அரசு, காவலன், சகுனி’ என படங்கள் குவிந்தது.

2002-ஆம் ஆண்டு தனது முதல் பட இயக்குநரான ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டார் ரோஜா. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், நடிகை ரோஜாவின் சொத்து மதிப்பு ரூ.70 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.