விஜய் படத்தின் தலைப்பில் விஜய் தேவரகொண்டா !

நடிகர் சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான படம் காத்து வாக்குல ரெண்டு காதல் . இந்த படம் சமீபத்தில் வெளியானது . விஜய் சேதுபதி , நயன்தாரா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து இருந்தனர் . இந்த படம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்நிலையில் நடிகர் சமந்தா அடுத்து நடிக்கும் படம் பற்றின தகவல் வெளியாகி இருக்கிறது . இந்த படத்திற்கு குஷி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது .

விஜய் தேவரகொண்டா இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் . இந்த படம் ரொமான்டிக் காமெடி படமாக வெளியாக இருக்கிறது . படத்தை ஷிவ் நிர்வாணா இயக்குகிறார். தமிழ், தெலுங்கு , மலையாளம் ,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது . இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது .

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள தேவரகொண்டா, “மகிழ்ச்சி, சிரிப்பு, அன்பு மற்றும் குடும்பப் பிணைப்பு . குஷி – தெலுங்கு தமிழ் கன்னடம் மலையாளம் டிசம்பர் 23 உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த கிறிஸ்துமஸ், புத்தாண்டு மகிழ்ச்சியை பரப்புங்கள். ” என்று பதிவிட்டுள்ளார்.

“இந்த கிறிஸ்துமஸ்- புத்தாண்டு. மகிழ்ச்சி, சிரிப்பு, மகிழ்ச்சி மற்றும் அன்பின் வெடிப்பு. ஒரு பெரிய குடும்ப அனுபவம்! தெலுங்கு தமிழ் கன்னடம் மலையாளம் டிசம்பர் 23 உலகமெங்கும் வெளியாகிறது!” என்று சமந்தா படத்தின் போஸ்டரை பகிர்ந்து உள்ளார் .

Share.