அடேங்கப்பா… நடிகை சங்கீதாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சங்கீதா. இவர் தமிழில் நடித்த முதல் படமான ‘பூஞ்சோலை’ வெளியாகவே இல்லை. அந்த படத்தில் வெங்கட் பிரபு தான் ஹீரோவாக நடித்திருந்தாராம். அதன் பிறகு ‘காதலே நிம்மதி’ என்ற படம் தான் தமிழில் முதல் படமாக சங்கீதாவுக்கு வெளியானது. இந்த படத்தில் ஹீரோவாக சூர்யா நடித்திருந்தார்.

‘காதலே நிம்மதி’ படத்துக்கு பிறகு நடிகை சங்கீதாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘உதவிக்கு வரலாமா, பகவத் சிங், கெஸ்ட் ஹவுஸ், அன்புள்ள காதலுக்கு, டபுள்ஸ், கபடி கபடி, பிதாமகன், உயிர், எவனோ ஒருவன், காளை, நாயகன், தனம், நான் அவன் இல்லை 2, குட்டிப் பிசாசு, மன்மதன் அம்பு, தம்பிக்கோட்டை, உச்சிதனை முகர்ந்தால், நெருப்புடா’ என தமிழ் படங்கள் குவிந்தது.

நடிகை சங்கீதா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2009-ஆம் ஆண்டு பிரபல பின்னணி பாடகர் க்ரிஷ்-ஐ திருமணம் செய்து கொண்டார் சங்கீதா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இப்போது சங்கீதா நடிப்பில் தமிழில் ‘தமிழரசன்’, தெலுங்கில் ‘ஆச்சார்யா, F3’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகை சங்கீதாவின் சொத்து மதிப்பு ரூ.12 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.