சைனீஸ் ரெஸ்டாரன்ட்… நடிகை சஞ்சனா சிங் எடுத்த புதிய அவதாரம்!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சஞ்சனா சிங். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘ரேனிகுண்டா’ திரைப்படம். ஜானி ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை பன்னீர் செல்வம் இயக்கியிருந்தார். ‘ரேனிகுண்டா’ படத்துக்கு பிறகு நடிகை சஞ்சனா சிங்கிற்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘காதல் பாதை, யாருக்கு தெரியும், ரகளபுரம், வெற்றிச்செல்வன், அஞ்சான், விஞ்ஞானி, மீகாமன், இரவும் பகலும், தனி ஒருவன், சக்க போடு போடு ராஜா’ என படங்கள் குவிந்தது. திரைப்படங்களில் சஞ்சனா சிங் நடிக்கும் கேரக்டர்கள் நம் கவனத்தை ஈர்க்காவிட்டாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடிகை சஞ்சனா சிங் தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடினார். தற்போது, சென்னை வடபழனியில் ‘யம்மியோஷா’ என்ற பெயரில் சைனீஸ் ரெஸ்டாரன்ட் (YUMMIYOZA CHINESE RESTAURANT) ஆரம்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

1

2

 

View this post on Instagram

 

A post shared by Sanjana Singh (@actresssanjana)

 

View this post on Instagram

 

A post shared by @yummioza_chinese_restaurant

Share.