வைரலாகும் நடிகை சினேகாவின் புகைப்படம் !

என்னவளே என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சினேகா . இந்த படம் 2000-ஆம் ஆண்டு வெளியானது .அதன் பிறகு வெளியான ஆனந்தம் படம் இவரை மக்கள் மனதிற்கு நெருக்கமாக்கியது . மேலும் இந்த படத்தில் இருந்த பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் என்கிற மட்டும் அந்த நேரத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது .

இந்த படத்தை தொடர்ந்து பார்த்தாலே பரவசம் , உன்னை நினைத்து , ஏய் நீ ரொம்ப அழகா இருக்க , விரும்புகிறேன் என அடுத்து அடுத்து பல படங்களில் நடித்தார் . கமல் , சூர்யா , விஜய் , அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்து இருக்கிறார் .

2011-ஆம் ஆண்டு இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் .அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார் . பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக பங்கு கொண்டு வருகிறார் . மேலும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படத்தை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் .

அந்த வகையில் சமீபத்தில் இவர் பதிவிட்ட படம் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது .

 

Share.