அடேங்கப்பா… நடிகை ஸ்ரீ திவ்யாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ரீ திவ்யா. ஆரம்பத்தில் சில தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீ திவ்யா ‘மனசாரா’ (தெலுங்கு) என்ற படத்தில் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். அதன் பிறகு இரண்டு தெலுங்கு படங்களில் நடித்த ஸ்ரீ திவ்யாவை, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக்கி தமிழ் சினிமாவும் அழகு பார்த்தது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வலம் வந்து அந்த படத்தில் ரசிகர்களின் லைக்ஸை குவித்தார் ஸ்ரீ திவ்யா. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்துக்கு பிறகு ஸ்ரீ திவ்யாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஜீவா, வெள்ளக்கார துரை, காக்கி சட்டை, ஈட்டி, பெங்களூர் நாட்கள், பென்சில், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு, சங்கிலி புங்கிலி கதவ தொற’ என தமிழில் படங்கள் குவிந்தது.

இப்போது ஸ்ரீ திவ்யா நடிப்பில் தமிழ் மொழியில் ‘ஒத்தைக்கு ஒத்த’, மலையாள மொழியில் ‘ஜன கண மன’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ஒத்தைக்கு ஒத்த’ படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. ‘ஜன கண மன’ படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் முடிவடைந்தது. இந்நிலையில், நடிகை ஸ்ரீ திவ்யாவின் சொத்து மதிப்பு ரூ.10 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.