நடிகை ஸ்ரீதேவி விஜயக்குமாரின் மகள் ரூபிகாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் ஸ்ரீதேவி விஜயக்குமார். பிரபல நடிகர் விஜயக்குமார் – நடிகை மஞ்சுளா விஜயக்குமாரின் மகளான இவர் ஆரம்பத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார்.

ஸ்ரீதேவி விஜயக்குமார் ஹீரோயினாக நடித்த முதல் படம் ‘காதல் வைரஸ்’. இந்த படத்தை இயக்குநர் கதிர் இயக்க, இதில் ஹீரோவாக ரிச்சர்ட் நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு நடிகை ஸ்ரீதேவி விஜயக்குமாருக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் மாதவனின் ‘ப்ரியமான தோழி’, ஜீவாவின் ‘தித்திக்குதே’, தனுஷின் ‘தேவதையை கண்டேன்’ என படங்கள் குவிந்தது. ஸ்ரீதேவி விஜயக்குமார் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

2009-ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீதேவி. இவர்களுக்கு ரூபிகா என்ற மகள் இருக்கிறார். தற்போது, ஸ்ரீதேவி விஜயக்குமார் இன்ஸ்டாகிராமில் தனது மகளின் 6-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார்.

Share.