நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ருஷ்டி டாங்கே. இவருக்கு 2010-ஆம் ஆண்டு முதல் தமிழ் பட வாய்ப்பு அமைந்தது. அது தான் ‘காதலாகி’. இந்த படத்துக்கு பிறகு மிஷ்கின் இயக்கி சேரன் ஹீரோவாக நடித்த ‘யுத்தம் செய்’ படத்தில் லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு மகளாக நடித்தார் ஸ்ருஷ்டி டாங்கே.

‘யுத்தம் செய்’ படத்துக்கு பிறகு நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், கத்துக்குட்டி, வில் அம்பு, நவரச திலகம், ஜித்தன் 2, தர்மதுரை, அச்சமின்றி, முப்பரிமாணம், சரவணன் இருக்க பயமேன், காலக்கூத்து, சத்ரு, பொட்டு, ராஜாவுக்கு செக், சக்ரா’ என தமிழ் படங்கள் குவிந்தது.

ஸ்ருஷ்டி டாங்கே தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, ஸ்ருஷ்டி டாங்கே நடித்து கொண்டிருக்கும் புதிய படம் ‘கட்டில்’. கணேஷ் பாபு ஹீரோவாக நடிப்பதுடன், அவரே இப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இன்று (மே 26-ஆம் தேதி) நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, பர்த்டே கேக் வெட்டும் போது எடுத்த கியூட்டான வீடியோ வெளியாகியுள்ளது.

Share.