நடிகை சுனைனாவின் புதிய படத்தின் அப்டேட்!

காதலில் விழுந்தேன் என்கிற படம் தமிழ் திரையுலகில் பிரபலமாக ஆனவர் நடிகை சுனைனா . அதன் பிறகு பல படங்களில் இவர் நாயகியாக நடித்து இருந்தார்.

பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் “ரெஜினா”. இப்படத்தினை மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கியுள்ளார். மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ரெஜினா”. இப்படத்தில், சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். எல்லோ பியர் புரொடக்‌ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ். ஆர் எழுதியுள்ளனர். இப்படத்தை பவி கே. பவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நடிகை சுனைனா சில்லுக்கருப்பட்டி படத்தில் நடித்த பிறகு அவரது படங்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.

Share.