அடேங்கப்பா… நடிகை தபுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தபு. தபு தமிழில் அறிமுகமான முதல் படமே மிகப் பெரிய ஹிட்டானது. அது தான் ‘காதல் தேசம்’. இயக்குநர் கதிர் இயக்கியிருந்த இந்த படத்தில் வினீத், அப்பாஸ் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் லைக்ஸை குவித்தது.

‘காதல் தேசம்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை தபுவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே, டேவிட்’ என தமிழ் படங்கள் குவிந்தது. தபு தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம், பெங்காலி, மராத்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

50 வயதான தபு இதுவரை திருணம் செய்து கொள்ளவில்லை. இப்போது தபு நடிப்பில் ஹிந்தியில் ஒரு படம், மலையாளத்தில் ஒரு படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகை தபுவின் சொத்து மதிப்பு ரூ.52 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.