மீண்டும் போட்டோஷூட் நடத்திய தமன்னா !

2006-ஆம் ஆண்டு வெளியான கேடி என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தமன்னா . அதன் பிறகு வியாபாரி , கல்லூரி உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார் . அதன் பிறகு படிக்காதவன் , அயன் ,பையா போன்ற வெற்றி படங்களில் நடித்து இருந்தார் .

தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து வெற்றி பெற்றார் தமன்னா . இந்திய சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப் படமான பாகுபலி படத்திலும் இவர் நடித்து இருந்தார் . பாகுபலி படத்திற்கு பிறகு இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் பெரிதாக பட வாய்ப்பு வரவில்லை. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பெட்ரோமேஸ் , உள்ளிட்ட சில படங்களும் பெரிதாக வெற்றி பெறவில்லை .

தமிழில் இவர் நடித்த நவம்பர் ஸ்டோரி என்னும் வெப் சீரிஸ் மட்டும் நல்ல வரவேற்பை பெற்றது . இதனை தொடர்ந்து தமிழில் இவர் ஜெயிலர் படத்தில் நடிக்க உள்ளார் . மேலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் ஒரு போட்டோஷூட் நடத்தி இருக்கிறார் . அந்த போட்டோஷூட் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது .

Share.