பட வாய்ப்புக்காக டாப் ஹீரோவை டார்ச்சர் செய்த பிரபல நடிகை!

சினிமாவில் ஒரு காலத்தில் டாப் ஹீரோயினாக இருந்தவர் அந்த நடிகை. பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்த பின்பு, நடிக்காமல் இருந்தார்.

பின், மீண்டும் ஸ்டைலிஷ் இயக்குநரின் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு சில படங்களில் நடித்து வந்த நடிகை, டாப் ஸ்டாரின் படத்திலும் நடித்தார். ஆனாலும், நடிகையின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் எந்த படங்களும் அமையவில்லை.

இந்நிலையில், டாப் ஹீரோவும், அவரது மகனும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கும் செய்தியை பார்த்திருக்கிறார் அந்த நடிகை. உடனே, அந்த டாப் ஹீரோவை டார்ச்சர் செய்து அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் அந்த நடிகை. இந்த வாரம் தான் அப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

Share.