சொக்க வைக்கும் பேரழகில் வாணி போஜன்… தீயாய் பரவும் புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸ்!

தமிழில் ‘மாயா, ஆஹா, தெய்வ மகள், லட்சுமி வந்தாச்சு’ போன்ற டிவி சீரியல்களில் நடித்ததன் மூலம் அதிக கவனம் ஈர்த்த நடிகை வாணி போஜன். இவர் கடந்த ஆண்டு (2020) ரிலீஸான ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘லாக்கப்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார். வாணி போஜன் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது, வாணி போஜன் நடிப்பில் ‘தாழ் திறவா, பாயும் ஒளி நீ எனக்கு, கேசினோ, பகைவனுக்கு அருள்வாய்’, அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கும் படம், பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்கும் படம் என ஆறு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், வாணி போஜன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய தமிழ் படத்துக்கு ஓகே சொன்னார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ்வும் சேர்ந்து நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கான ஷூட்டிங் கடந்த மார்ச் 10-ஆம் தேதி முதல் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் முக்கிய ரோலில் வாணி போஜன் நடிக்கிறார். இந்நிலையில், நடிகை வாணி போஜன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சூப்பரான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இப்புது போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

Share.