ஷூட்டிங்கிற்கு செல்லாமல் பொய் சொல்லும் நடிகை… புலம்பும் படக்குழுவினர்!

சினிமா, அரசியல் என வலம் வரும் பிரபல நடிகரின் மகள் தான் இந்த நடிகை. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே விரல் வித்தை நடிகருடன் தான். முதல் படத்துக்கு பிறகு இந்த நடிகைக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது.

முன்னணி ஹீரோ ஒருவரின் அரசியல் படத்தில் பவர்ஃபுல்லான வில்லி ரோலிலும் மிரட்டியிருந்தார் இந்த நடிகை. இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது இந்த நடிகையின் நடிப்பில் எட்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், இவர் இப்போதெல்லாம் ஷூட்டிங்கிற்கு செல்ல மறுத்து வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. படக்குழுவினர் நடிகைக்கு போன் செய்தால், ஷூட்டிங் வராததுக்கு தினமும் ஒரு பொய்யை சொல்லி வருகிறாராம். ஏன் தான் இந்த நடிகை இப்படி பண்ணுகிறார்? என்று இவரை கமிட் செய்து படம் எடுக்கும் இயக்குநரும், தயாரிப்பாளரும் புலம்பி வருகிறார்களாம்.

Share.