விஜய்யுடன் மீண்டும் நடிக்க விரும்பும் நடிகை !

தமிழ் சினிமாவில் கிழக்கு கரை , இதுதாண்டா சட்டம் , நேருக்கு நேர் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை ஜெனிபர் . இவர் 2004-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து இருந்தார் . அந்த வருடத்தில் மிக பெரிய வெற்றி படமாக கில்லி படம் அமைந்து இருந்தது . கில்லி படத்தில் நடிகர் ஜெனிஃபருக்கும் விஜய்க்கும் உள்ள காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

அதன் பிறகு ஜெனிபர் பல படங்களில் நடித்து இருந்தாலும் விஜய் கூட கில்லி படத்திற்கு பிறகு இவர் நடிக்கவில்லை . இந்த நிலையில் நடிகை ஜெனிபர் நடிகர் விஜய் பற்றி ஒரு பேட்டி பேசி உள்ளார்.

“விஜய் சார் நிஜமாகவே என்கிட்ட தங்கச்சி மாதிரி தான் பழகினார் .என்னை அவருடைய சொந்த தங்கச்சி மாதிரி பார்த்துக்கிட்டார் .அண்ணன் – தங்கச்சி பாண்டிங் தான் எங்க ரெண்டு பேருக்குள்ளேயும் இருந்துச்சு. நான் சீட்ல யார்கிட்டேயும் நானா போய் பேசமாட்டான் . ஆனா விஜய் சாரே வந்து என்கிட்ட பேசுவாரு. சொல்லப் போனா செட்ல எல்லார்கிட்டேயும் அவர் பேசினதை விட என்கிட்ட இன்னும் ஸ்பெஷலா பேசி இருக்காரு . நேருக்கு நேர் படத்தில் நாங்க சேர்ந்து நடிச்சது அவருக்கு ஞாபகம் இருந்துச்சு . அதனால்தான் இந்த பொண்ணு நல்லா நடிக்கும் என்கிற நம்பிக்கையில் ஸ்பாட்ல சீன் பண்ணும் போது இதை இப்படி பண்ணலாம்னு நிறைய சொல்லி கொடுப்பார் . விஜய் சார் கூட சேர்ந்து நிச்சயம் மீண்டும் நடிப்பேன் என்கிற நம்பிக்கை எங்கு இருக்கு என்று கூறி இருக்கிறார் ஜெனிபர் .

Share.