நேற்று ‘பிக் பாஸ் 5’-யில் எலிமினேட்டான வருண் & அக்ஷராவை நேரில் சந்தித்த மதுமிதா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பாவனி ரெட்டி, சின்னப்பொண்ணு, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி, தாமரைச்செல்வி, சிபி, நிரூப் ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியேறி விட்டார். கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி நாடியா சங் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி சின்னப்பொண்ணு எலிமினேட் செய்யப்பட்டார்.

கடந்த நவம்பர் 7-ஆம் தேதி சுருதி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 14-ஆம் தேதி மதுமிதா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 19-ஆம் தேதி வைல்ட் கார்ட் மூலம் ரீ-என்ட்ரி ஆனார் அபிஷேக் ராஜா. கடந்த நவம்பர் 21-ஆம் தேதி இசைவாணி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 23-ஆம் தேதி வைல்ட் கார்ட் மூலம் டான்ஸ் மாஸ்டர் அமீர் என்ட்ரி ஆனார்.

கடந்த நவம்பர் 25-ஆம் தேதி வைல்ட் கார்ட் மூலம் நடிகர் சஞ்சீவ் என்ட்ரி ஆனார். கடந்த நவம்பர் 28-ஆம் தேதி ஐக்கி பெர்ரி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி இமான் அண்ணாச்சி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி அபிநய் எலிமினேட் செய்யப்பட்டார்.

நேற்றைய பிக் பாஸ் ஷோவில் அக்ஷரா ரெட்டி மற்றும் வருண் ஆகிய இருவருமே எலிமினேட் செய்யப்பட்டார்கள். தற்போது, ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த மதுமிதா, அக்ஷரா, வருண் ஆகிய மூவரும் நேரில் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை மதுமிதாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதுடன், அவர்களுடன் எடுத்துக் கொண்ட ஒரு ஸ்டில்ஸையும் ஷேர் செய்துள்ளார்.

Share.