இளையராஜாவை சந்தித்த ஐஸ்வர்யா ரஜினிக்காந்த்

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவர் இளையராஜா . இவர் தற்பொழுது வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்திற்காக இசையமைக்கிறார்.

சில வாரங்களுக்கு முன் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருந்தார் இளையராஜா .இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் அவரது மகன்களுடன் கலந்துக் கொண்டார். நடிகர் தனுஷ் அவரது மகன்களுடன் இருக்கும் புகைப்படம் வைரலானது. மேலும் நடிகர் தனுஷ் மேடையில் பாட்டும் பாடினார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்பொழுது இளையராஜாவை சந்தித்துள்ளார்.இசை மாயாஜாலம் செய்யும் இளையராஜா அவர்களை சந்தித்து அவருடன் சில மணி நேரங்கள் பேசியது மிகப்பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Share.