விவாகரத்துக்கு பிறகு நடிகர் நாகசைத்தன்யாவின் ஸ்டில்லை ஷேரிட்டு சமந்தா சொன்ன விஷயம் என்ன தெரியுமா?

தெலுங்கு திரையுலகில் ‘ஏ மாயா சேசவே’ என்ற திரைப்படம் 2010-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக நாகசைத்தன்யா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியிருந்தார். இது தான் சமந்தா அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம். இப்படத்தில் சமந்தா ‘ஜெஸ்ஸி’ என்ற கேரக்டராக வலம் வந்திருந்தார். இதில் இவரது நடிப்பு அனைவரையும் ஈர்த்து விட்டது.

இது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ (தமிழ்) படத்தின் தெலுங்கு வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாஸ் காட்டும் சமந்தாவிற்கு, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 2017-ஆம் ஆண்டு தனது முதல் படத்தின் கதாநாயகனான நாகசைத்தன்யாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா.

கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 2-ஆம் தேதி நடிகை சமந்தாவும், நாகசைத்தன்யாவும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். சமீபத்தில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாகசைத்தன்யாவுடன் எடுத்துக்கொண்ட ஸ்டில்ஸ் மற்றும் விவாகரத்து குறித்த பதிவையும் நீக்கினார். மேலும், இன்ஸ்டாகிராமில் நாகசைத்தன்யாவை UNFOLLOW செய்திருந்தார் சமந்தா.

2019-ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் ‘மஜிலி’. இந்த படத்தை இயக்குநர் ஷிவநிர்வனா இயக்கியிருந்தார். இதில் நாகசைத்தன்யா – சமந்தா ஜோடியாக நடித்திருந்தனர். நேற்றுடன் (ஏப்ரல் 5-ஆம் தேதி) இப்படம் வெளியாகி மூன்று ஆண்டுகளாகி விட்டது. இது தொடர்பாக சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் #3YearsofMajili என்று குறிப்பிட்டு அப்படத்தின் போஸ்டரை ஷேர் செய்துள்ளார்.

Share.