“ராஜு அண்ணாவோட உண்மையான முகம் இதுதான்”… உண்மையை போட்டுடைத்த ‘பிக் பாஸ் 5’ சுருதி!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பாவனி ரெட்டி, சின்னப்பொண்ணு, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி, தாமரைச்செல்வி, சிபி, நிரூப் ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியேறி விட்டார். கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி நாடியா சங் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி சின்னப்பொண்ணு எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 7-ஆம் தேதி சுருதி எலிமினேட் செய்யப்பட்டார்.

கடந்த நவம்பர் 14-ஆம் தேதி மதுமிதா எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, சுருதி மீடியாவுக்கு கொடுத்திருக்கும் ஒரு பேட்டியில் “ராஜு அண்ணா 100% safe game தான் விளையாடுறாரு. ராஜு அண்ணாவை பத்தி என்னோட understanding என்னன்னா, அவர் 4 வருஷமா ‘பிக் பாஸ்’ வரணும்னு try பண்ணிட்டு இருந்துருக்காரு. ஒரு விஷயத்துக்கு try பண்றோம் அப்படின்னா, நம்ம அதுக்கான practice போடுவோம் அந்த இடத்துல.. so அந்த நாலு வருஷம் எவ்ளோ practice போட்டிருப்பாருன்னு அவருக்கு தான் தெரியும். and அவர் வந்து ஒரு இயக்குநர் ஆகணும்னு நினைக்கிறாரு. so, எந்த இடத்துல எப்படி பேசினா reach ஆகும்னு அவருக்கு தெரியும்” என்று கூறியுள்ளார்.

Share.